தமிழும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர் தரிசனம் முடித்து வெளியே வந்த ஆளுநர் பத்திரிகையாளர்களைச் சந்திது பேசினார்.
அப்போது பேசிய ஆளுநர் தமிழிசை , “பிரதோஷ நாளில் நடராஜரைத் தரிசனம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சிதம்பரம் நடராஜருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நடராஜர் கோவிலுக்கு வரும்போது நான் மிகவும் இன்பம் அடைவேன். தமிழக மக்கள் ஆனந்தமாக இறைவனைத் தரிசனம் செய்கின்றனர்.
கோவிலுக்கு வருவது ஒரு சைக்கோ தெரபி. என்ன பாரம் இருந்தாலும் சரியாகிவிடும். வெளிநாடுகளில் மூளைக்கு மூளை மனநல மருத்துவமனை இருக்கும் தமிழ்நாட்டில் கோவில்கள் இருக்கும். இறைவன் காலடியில் கஷ்டங்களைச் சமர்ப்பித்து விட்டால் கஷ்டங்கள் நீங்கிவிடும்.
தமிழையும் ஆன்மீகத்தையும் பிரிக்கும் ஒரு முயற்சி நடக்கின்றது. தமிழும் ஆன்மீகமும் ஒன்றுதான். அதனால் தமிழும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது ஆன்மீகத் தமிழ் தான் நமக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. சில பேரின் சூழ்ச்சியினால் ஆன்மிகத்துக்கும் தமிழுக்கும் சம்பந்தம் இல்லை என ஒரு கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது தவறானது தமிழையும் ஆன்மிகத்தையும் பிரிக்கவே முடியாது” எனத் தெரிவித்தார்.







