திருவாரூர் முத்துவேல் கருணாநிதி நூல் வெளியீட்டு விழா திமுக இளைஞரணி
செயலாளர் உதயநிதி நூலை வெளியிட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெற்றுக் கொண்டார்.
திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான் நூல் வெளியீட்டு விழா அண்ணா
அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது. அதன் நேரலையை தற்போது காணலாம் . இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பங்கேற்றுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான் நூல் வெளியீட்டு விழா அண்ணா
அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நக்கீரன் கோபால் மற்றும் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன்
பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
இந்த புத்தகம் தயார் செய்ய கிட்ட தட்ட சுமார் 6 மாத காலம் ஆகின. புத்தகத்தை
தாயார் செய்த பிறகு என்னை அழைத்து புத்தகத்தை என்னை வெளியிட சொன்னார்கள்.
இந்த நிகழ்ச்சி அன்பகதில் நடத்தப்படவில்லை என்று எனக்கு வருத்தம். ஏன் என்றால்
அங்கு நடைபெற்றால் மாணவர் அணி வருமானம் கிடைத்து இருக்கும்.
கலைஞர் கருணாநிதி திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் தான் வெற்றி பெற்றார். ஆனால்,
இப்போது நான் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இந்த புத்தகத்தை
வெளியிட வந்து இருக்கிறேன்.
இளைஞர் அணி பொறுப்பு வழங்கும் பொழுது நான் வேண்டாம் என்று கூறினேன்.வேற எதாவது சிறிய பொறுப்பு வழங்குங்கள் என்று தெரிவித்தேன். ஆனால் அதை எல்லாம் கேட்காமல் நீங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று சொல்லி அதற்கு மாணவர் அணியை எப்படி வழி நடத்த வேண்டுமோ, அதேபோல் இளைஞர் அணியை எப்படி எல்லாம் வழி நடத்த வேண்டும் என்று சிற்றரசு எனக்கு கற்றுக் கொடுத்தார்.
பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது நான் கோப்பாபுரம் இல்லத்தில் தான்
வளர்ந்தேன். அப்போது கலைஞர் பேசியது எல்லாம், ரெகார்ட் கேசட் முலம் வரும். தமிழில் மட்டும் அதிக மதிப்பெண் பெறுவேன் என்றார் உதயநிதி.
திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் பேசுகையில், “கலைஞர் கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தில் தான் அடுத்த முறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க வேண்டும்” என்றார். கலைஞரின் கடிதங்கள் அனைத்தும் உலகத்தின் வரலாறு என்றும் அவர் குறிப்பிட்டார்.