தமன்னாவின் புதிய புகைப்படங்கள் 3 மணி நேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமாக லைக்குகள் பெற்று வைரல் ஆகியுள்ளது.
தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி இவருக்கு திருப்புமுனை படமாக அமைந்தது.
இவர் தற்போது இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட்டில் இவர் நடித்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இந்தச் சூழலில் லஸ்ட் ஸ்டோரி 2வில் நடித்தபோது விஜய் வர்மாவுக்கும், தமன்னாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோதுதான் எனக்கும் விஜய் வர்மாவுக்கும் காதல் மலர்ந்தது. நான் எதிர்பார்த்த நபர் போலவே அவர் இருந்தார். உடன் நடிக்கும் நடிகரை காதலிப்பேன் என ஒருபோதும் நினைத்ததில்லை’ என கூறி தனது காதலை உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தமன்னா பதிவிட்ட புதிய பதிவில், “என்னை வெறுப்பவர்கள் வேண்டுமானால் இதை ஓவியம் அல்ல என்பார்கள்” என ஜாலியாக அவரையே ஓவியமென புகழ்ந்துள்ளார். தமன்னாவின் புதிய புகைப்படங்கள் 3 மணி நேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமாக லைக்குகள் பெற்று வைரல் ஆகியுள்ளது.








