முக்கியச் செய்திகள் உலகம்

ஆப்கான் முன்னாள் அதிபர் அறையில் அமர்ந்தபடி தலிபான் போஸ்: வைரலாகும் போட்டோ

ஆப்கான் முன்னாள் அதிபர் அம்ருல்லா சலே அமரும் இடத்தில் உட்கார்ந்தபடி தலி பான் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து ஆப்கானிஸ்தானை தலிபான்கள்
கைப்பற்றியுள்ளனர். 20 வருடத்துக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ள அவர்கள், அங்கு புதிய அரசை விரைவில் அமைக்க இருக்கின்றனர்.

இந்நிலையில், தலிபான்களின் அரசை ஏற்காத முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே,
ஆப்கானிஸ்தானின் அதிபர் நான்தான் என அறிவித்திருந்தார். அவர் தனது சொந்த மாகாண மான பஞ்ச்ஷிரில் இருந்துகொண்டு, தலிபான்களுக்கு எதிராக கிளர்ச்சிப் படைகளுடன் போராடி வருகிறார். அங்கு தலிபான்களுக்கும் கிளர்ச்சி படைகளுக்கும் பயங்கர சண்டை நடந்து வருகிறது.

இந்த நிலையில் அம்ருல்லா சலேயின் மூத்த சகோதரரான ரோகுல்லா சலேயை, தலிபான் கள் கொடூரமாக சித்ரவதை செய்து கொன்றுள்ளனர். மோதலில் அவர் உயிரிழந்ததாக கிளர்ச் சி படையினர் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் பஞ்ச்ஷிரை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் அறிவித்தாலும்
அதை தலிபான் எதிர்ப்புப் படை மறுத்துள்ளது. தொடர்ந்து மோதல் நீடித்து வருவதாக அறி விக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, லைப்ரரி ஒன்றில் அமர்ந்தபடி அடிக்கடி வீடியோவில் பேசி அதை வெளியிட்டு வருவார் அம்ருல்லா சலே. அதே லைப்ரரியில் தலிபான் படையை சேர்ந்த ஒருவர் அமர்ந்தபடி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதனால் அவருடைய இடத்தையும் தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர் என்றும் அம்ருல்லா சலே நாட்டை விட்டு தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தான் நாட்டை விட்டு தப்பிக்கவில்லை என்று அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

பாலியல் புகார்: திடீரென பதவி விலகிய ஆஸி. டெஸ்ட் கேப்டன்!

Halley Karthik

சென்னையில் தீ விபத்துகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்

Halley Karthik

அதுக்குள்ள என்னாச்சு? கணவர் பெயரை திடீரென நீக்கிய பிரபல நடிகை

Halley Karthik