முக்கியச் செய்திகள் தமிழகம்

குடிவாரி கணக்கெடுப்பு எடுங்கள்-தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

குடிவாரி கணக்கெடுப்பு எடுங்கள்; இல்லை சமூக நீதி என பேசுவதை விடுங்கள் என
தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
தெரிவித்துள்ளார்.

குடிவாரி கணக்கெடுப்பு உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி சென்னை
வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை வழங்கினார் சீமான்
தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நாம் தமிழர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்
பங்கேற்று மத்திய மாநில அரசுகளை குடிவாரி கணக்கெடுப்பு எடுக்க வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது:

சமூக நீதி பேசக் கூடியவர்கள் குடி வாரி கணக்கெடுப்பு நடத்த ஏன் தயங்குகிறீர்கள். சமூகத்தின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீதி வழங்குவது தான் உண்மையான சமூக நீதி.
குடி வாரி கணக்கெடுப்பது தான் உண்மையான சமூக நீதி இல்லை என்றால், அது அநீதி.

குடி வாரி கணக்கெடுப்பு எடுங்கள் இல்லை சமூக நீதி என பேசுவதை விடுங்கள். குரு நானக் பிறந்த நாள், மகாவீர் ஜெயந்தி, தெலுங்கு வருட பிறப்பு கன்னட வருட பிறப்பு போன்றவற்றுக்கு தமிழ்நாட்டில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மொழி வாரி கணக்கெடுப்பும் தேவை. ஆனால், வள்ளுவர் பிறந்த நாள், தமிழ் புத்தாண்டு போன்ற தமிழ் பண்டிகைகளுக்கு பிற மாநிலங்களில் ஏன் விடுமுறை அளிக்கப்படவில்லை. இவ்வளவு நாள் ஆட்சியில் இருந்த திராவிட மாடல் ஆட்சியாளர்கள் இதையெல்லாம் பெற்று தராமல் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என கேள்வி எழுகிறது.

ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின மக்கள், ஊராட்சி
அலுவலகத்தில் அமர இருக்கை தருவதில்லை. தேசியக் கொடியேற்ற அவர்களை சாதியவாதிகள் அனுமதிப்பதில்லை.

குடிவாரி கணக்கெடுப்பை எடுத்தால், மத்திய அரசால், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே
மொழி உள்ளிட்டவற்றை நிறைவேற்ற முடியாது. மத்திய அரசுப் பணிகளில் உயர் வகுப்பை சேர்ந்தவர்கள், அவர்களது மக்கள் தொகை எண்ணிக்கையை விட அதிக அளவு பயன் பெறுகின்றனர்.

திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்கள் ஏமாந்து விட்டார்கள் என்றார் சீமான்.


செய்தியாளர் சந்திப்புக்கு இடையில் தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த
செய்தியாளர் ஒருவர் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு குறித்த கேள்வி
கேட்கும் போது ஆத்திரமடைந்த சீமான் அந்த செய்தியாளரை நோக்கி மண்டையை உடைத்து விடுவேன் என கூறி தரைக் குறைவாக பேசினார். இதை அடுத்து கட்சி நிர்வாகிகள் அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதால் பரபரப்பு
ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த காவல்துறையினரும் சக செய்தியாளர்களும் சமாதானம்
பேசியதால் பரபரப்பு ஓய்ந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இரா.நெடுஞ்செழியன் சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

G SaravanaKumar

பல்கலைக்கழகங்களில் முறைகேடுகளை விசாரிக்க குழு: அமைச்சர் பொன்முடி

EZHILARASAN D

வாக்கு எண்ணும் மையங்களில் திமுக நிர்வாகிகளை அனுமதிக்கக் கூடாது: அதிமுக

G SaravanaKumar