ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த தமிழன்!

நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கப்பலோட்டிய தமிழன் என போற்றப்படும் வ.உ.சிதம்பரனார் கப்பல் வாங்கிய வீரம்செறிந்த கதை பற்றி பார்க்கலாம். `வணிகம்’ எனும் ஆயுதம் ஏந்திதான் ஆங்கிலேயர்கள் நம்மை…

நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கப்பலோட்டிய தமிழன் என போற்றப்படும் வ.உ.சிதம்பரனார் கப்பல் வாங்கிய வீரம்செறிந்த கதை பற்றி பார்க்கலாம்.

`வணிகம்’ எனும் ஆயுதம் ஏந்திதான் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தினர். நம் மண்ணின் வளத்தையும் மக்கள் உழைப்பையும் கொள்ளையடித்துக் கொண்டுசென்றனர். அவர்களை எதிர்த்துப் போராடிய நம்மவர்களின் கையில் அகிம்சை, புரட்சி என்ற இரு ஆயுதங்களே முதன்மையாக இருந்தது. ஆனால், விதிவிலக்காக வேறொரு ஆயுதத்தை கையிலெடுத்தான் ஒரு வீரர். ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஒரு தமிழன் ‘வணிகம்’ தான் ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு வேட்டுவைக்கும் வெடிமருந்து என்பதைக் கண்டுணர்ந்தார். அவர் தான் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம்!

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், British India Steam Navigation Company எனும் ஆங்கிலேய கப்பல் கம்பெனியின் ஆதிக்கமே இந்தியப் பெருங்கடலில் கொடிகட்டிப் பறந்தது. குறிப்பாக, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் பயணிகள் போக்குவரத்தில் அந்த நிறுவனமே முதலிடத்தில் இருந்து, லாபம் ஈட்டி கொண்டிருந்தது. அப்போது தான், ஏழைகளுக்கு இலவசமாக வாதாடும் வழக்கறிஞராக இருந்த வ.உ.சி., சொந்தக் கப்பல் ஒன்றை வாங்கி அதை ஆங்கிலேயருக்கு எதிராக சிம்மசொப்பனமாக நினைத்தார்.

நினைத்ததை நடத்துவதன் அஸ்திவாரமாக, சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் எனும் முதல் இந்திய கப்பல் கம்பெனியை உருவாக்கினார். அவருக்கு உறுதுணையாக, வள்ளல் பாண்டித்துரை, சேலம் விஜயராகவாச்சாரி, ஹாஜி.பக்கீர் முகம்மது என பலரும் பொருளுதவி தந்து உதவினர். அவர்களையெல்லாம் பங்குதாரர்களாக, நிறுவனத்தின் பொறுப்பாளர்களாக நியமித்துக்கொண்டார் வ.உ.சி. அப்போதே சுமார் 10 லட்சம் ரூபாய் முதலீட்டுடன், 40 ஆயிரம் பங்குகளைக் கொண்டிருந்தது சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி. லாவோ, காலியோ என்ற இரண்டு கப்பல்களை வாங்கி தூத்துக்குடிக்கும் இலங்கையின் கொழும்புக்கும் இடையே போக்குவரத்தைத் தொடங்கினார்.

சைவ நெறி காந்தி, காந்தியவாதி கூறுகையில், “இவரது வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்ட ஆங்கிலேயர்கள் அவரது வளர்ச்சியை தடுக்கும் வகையில், பல சதிவேளைகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து வ உ சி முன்னேறி கொண்டே சென்றதால், ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டார். ஆங்கிலேயர்களால், இரட்டை ஆயுள் விதித்து தண்டிக்கப்பட்டவரும் இவரே” என்றார்.

வ.உ.சி. கொள்ளுப்பேத்தி செல்வி கூறுகையில், 

“ஆனால், எதைக்கண்டும் கலங்கிப்போய் நின்றிடாத வ.உ.சி. எனும் சுதேச மனிதக்கப்பல், விடுதலைப்போராட்டம், சுதந்திரப்போராட்டம் என அடுத்தடுத்து விடுதலை நோக்கியே நகர்ந்துகொண்டிருந்தது. சிறை புகுந்து, தனது ரத்தத்தால் இந்திய விடுதலைக்கான தனது வீரத்தையும், தியாகத்தையும் வரலாற்றில் எழுதி, அழியா சிற்பமாக உருவெடுத்தது” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.