ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து, ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.
ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், 116 புள்ளிகள் பெற்று ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக 115 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 2ம் இடத்தில் உள்ளது.
அதேபோல், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 118 புள்ளிகளுடனும், டி20 தரவரிசையில் 264 புள்ளிகளுடனும் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இதன் மூலம் ஐசிசி கிரிக்கெட் தரவரிசையில் ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்தியா முதல் இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.







