உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகையை அறிவித்த ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் அக்டோபர் மாதம் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில்,…

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.

இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் அக்டோபர் மாதம் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகையை ஐசிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சுமார் 33 கோடி ரூபாயும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு சுமார் 16 கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

மேலும், அரையிறுதியில் தோல்வி அடையும் 2 அணிகளுக்கு தலா 6 கோடி ரூபாயும் குரூப் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு 82 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.