ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில்…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. மொகாலியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இநதிய அணி முதலில் பீல்டிங் செய்தது.

இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே விக்கெட் கிடைத்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஸ் சமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அந்த அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் குவித்தது. முகமது சமி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீர்ர்கள் துராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் சிறப்பாக விளையாடினர். 48.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 281 குவித்து வெற்றி பெற்றது. சுப்மன் கில் 74, துராஜ் கெய்க்வாட் 71, ராகுல் 51 ரன்கள் சேர்த்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.