முக்கியச் செய்திகள் விளையாட்டு

இங்கிலாந்துடன் பயிற்சிப் போட்டி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

டி-20 உலக கோப்பை கிரிக்கெட்டில், தரவரிசைப் பட்டியலில் டாப்-8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் விளையாடுகின்றன. இந்திய அணி சூப்பர்-12 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானை வரும் 24-ஆம் தேதி எதிர்கொள்கிறது. அதற்கு முன் இந்திய அணி 2 பயிற்சி ஆட்டங்களில் ஆடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் இங்கிலாந்து அணியுடன் துபாயில் இன்று நடக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விராத் கோலியும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றதால், ஐக்கிய அரபு அமீரக ஆடுகளத்தின் தன்மை அவர்களுக்குத் தெரிந்திருக்கும். இதனால் ஆடும் லெவன் அணியை அடையாளம் காண இந்த பயிற்சிப் போட்டி உதவுவதாக இருக்கும். தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவுடன் கே.எல்.ராகுல் அல்லது இஷான் கிஷான் களமிறங்க வாய்ப்பிருக்கிறது. ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் பந்துவீசவில்லை. பேட்டிங்கிலும் ஃபார்மில் இல்லை. இந்தப் பயிற்சி ஆட்டத்தை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி கேப்டனாக செயல்பட்டார். அவர் இந்த தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால், இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி ஆகியோர் ஐபிஎல்-லில் சிறப்பாக செயல்பட்டனர். அதனால் இந்த பயிற்சி ஆட்டம் பரபரப்பாகவே இருக்கும்.

இந்த பயிற்சி போட்டிக்கான டாஸை வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனால் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கி இருக்கிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: பார்போரா கிரெஜ்சிகோவா சாம்பியன் பட்டம் வென்றார்!

Vandhana

நீட்தேர்வு- சட்டப்பேரவையில் காரசார விவாதம்

G SaravanaKumar

முதலமைச்சருடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை

Vandhana