இலங்கை கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன் காலமானார்

இலங்கை கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன் பந்துல வர்ணபுறா உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 68 இலங்கை அணியின் முன்னாள் வீரர் பந்துல வர்ணபுறா. ஆல்ரவுண்டரான அவர் அணியின் தொடக்க ஆட்டக்காராக…

இலங்கை கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன் பந்துல வர்ணபுறா உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 68

இலங்கை அணியின் முன்னாள் வீரர் பந்துல வர்ணபுறா. ஆல்ரவுண்டரான அவர் அணியின் தொடக்க ஆட்டக்காராக திழந்தவர். மேலும் இவர் மித வேகப்பந்து வீச்சுக்கும் பெயர் போனவர். இவர் 1975 முதல் 1982 வரை இலங்கை அணிக்காக 4 டெஸ்ட், 12 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். மேலும் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றிருக்கிறார்.

இந்த மாதம் தொடக்கத்தில் அவருக்கு நீரிழிவு நோய் மிகுதியால் வலது கால் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.