நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து நான்கு நாட்களாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற மழை கால கூட்டத்தொடரில் ஐந்தாவது நாள் அமர்வு கூடியது. அப்போது எதிர்க்கட்சிகளின் கடும் அமளி மற்றும் முழக்கங்கள் காரணமாக இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், நண்பகல் 12 மணிக்கு அவைகள் மீண்டும் கூடியது. அப்போது, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.




