டி20 உலக கோப்பை; டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு

டி20 உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து-இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. டி20 போட்டியில் தற்போது…

டி20 உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து-இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. டி20 போட்டியில் தற்போது சூப்பர் 12 சுற்றின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று குரூப்1-ல் சிட்னியில் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இங்கிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 5 புள்ளிகள் பெற்று இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும். தோல்வி அடைந்தால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்த டி20 போட்டியில் இலங்கை அணி இதுவரை 4 போட்டிகள் விளையாடி உள்ளது. இதில் 2 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இதனால் தரவரிசை பட்டியலில் 4 புள்ளிகள் பெற்று 4 வது இடத்தில் உள்ளது. எனவே இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதி சுற்றுக்கு நுழைவதற்கு வாய்ப்புகள் இல்லை.

இலங்கை அணி 20 ஓவர் கிரிக்கெட்டில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு, இங்கிலாந்த் அணியை வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.