33.9 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: 89 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்  நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்றது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்யில் சூப்பர்12 சுற்று இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டேவான் கான்வே, பின் ஆலன் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சிறப்பாக விளையாடிய ஆலன் 16 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து கேன் வில்லியம்சன் களமிறங்கினார் மறுபுறம் கான்வே அதிரடியை தொடங்கினார். அவர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். மறுமுனையில் கேன் வில்லியம்சன் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கிளென் பிலிப்ஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் இழந்தாலும் கான்வே தொடர்ந்து ரன்கள் குவித்தார் அடுத்துவந்த நீசம் கடைசி நேரத்தில் சிக்ஸர்களை பறக்க விட்டார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. கான்வே 92 ரன்களுடன் ,ஜிம்மி நீஷம் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து 201 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்கத்தில் வார்னர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஆரோன் பின்ச் 13 ரன்களில் வெளியேறினார். அதையடுத்து களமிறங்கிய மிட்சேல் மார்ஷ் 16 ரன்களிலும், ஸ்டோனிஸ் 7 ரன்களிலும், டிம் டேவிட் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த அணியில் மேக்ஸ்வெல் தவிர மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading