டி20 உலக கோப்பையில் இந்தியா-வங்கதேசத்திற்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. முதலில் நடைபெற்ற போட்டியில் ஜிம்பாவே-நெதர்லாந்து அணிகள் மோதின. அந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாவே அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதுகின்றன. இந்திய அணிக்கு இனி விளையாட இருக்கும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் நடத்திய பலபரீட்சையில் இந்திய அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து நெதர்லாந்துடன் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.
3வது போட்டி இந்தியா-தென்ஆப்பிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றது. தற்போது 4 புள்ளிகளுடன் உள்ள இந்திய அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் அதாவது, வங்காளதேசம், ஜிம்பாப்வேக்கு எதிராக வெற்றி பெற்றாக வேண்டும்.
இந்தியா-வங்கதேசத்திற்கிடையே இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கி தற்போது விளையாடி வருகிறது.








