டி20 உலக கோப்பை போட்டியில் ஜிம்பாவேக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. இதில் குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2ல் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் தனது குரூப்பில் முதல் இடத்துக்கு முன்னேறி அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள நினைக்கும். ஒருவேளை இந்திய அணி இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் குரூப் 2ல் 2வது இடத்துக்கு சரிந்து அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள வேண்டி வரும்.
இந்தியா இதுவரை 4 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில், தென்ஆப்பிரிக்கா உடன் மோதியதில் தோல்வியை தழுவியது. 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இன்று நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா-நெதர்லாந்து அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.
இந்நிலையில், இன்று நடைபெறும் இந்தியா-ஜிம்பாவே அணிகளுக்கு இடையேயான ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இந்திய அணியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் இடம் பெற்றுள்ளார்.