டி20 உலக கோப்பை: ஜிம்பாவேக்கு 187 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

டி20 உலக கோப்பை போட்டியில் ஜிம்பாவேக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 186 ரன்களை குவித்தது. 8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில்…

டி20 உலக கோப்பை போட்டியில் ஜிம்பாவேக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 186 ரன்களை குவித்தது.

8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. இதில் குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2ல் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

இந்நிலையில், சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் விளையாடியது.

தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித சர்மா, கே.எல் ராகுல் களமிறங்கினர். ரோகித் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ராகுல் அரைசதமடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 26 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக களமிறங்கிய ரிஷப் பண்ட் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இறுதியில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில்6 பவுண்டரி 4 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி விளையாட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.