உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின், நேற்றைய ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றன.
டி20 உலக கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 தகுதி சுற்றுக்கான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் பெறும். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின. மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இங்கிலாந்து-நியூசிலாந்து
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி, டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளுக்கு 179 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஜாஸ் பட்லர் 73 ரன்கள் எடுத்தார்.
தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய அலெக்ஸ் கேல்ஸ் 52 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பின்னர் ஜோஸ் பட்லர் அதிரடியை தொடர்ந்தார். சிறப்பாக விளையாடிய பட்லர் 47 பந்துகளில் 73 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த மொயின் அலி 20 ரன்கள், ஹாரி புரூக் 7 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் சோபிக்க தவறியதால் கடைசி 3 ஓவரில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.
இருப்பினும் அந்த அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 179 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 159 ரன்கள் மட்டுமே எடுத்து முதல் முறையாக தோல்வியை தழுவியது.
ஆப்கானிஸ்தான்-இலங்கை
மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி வெற்றி இலக்கை 18.3 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.