டி20 உலக கோப்பை; இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 ஆட்டத்தில், ஆஸ்திரேலியா அணி இலங்கையை வீழ்த்தியது. 8வது டி20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சுற்று போட்டியில் ஆஸ்திரேலியா, இலங்கை…

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 ஆட்டத்தில், ஆஸ்திரேலியா அணி இலங்கையை வீழ்த்தியது.

8வது டி20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சுற்று போட்டியில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து இலங்கை அணி முதலலி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது.

இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஸ்டாய்னிஸ் அதிரடியால் ஆஸ்திரேலிய அணி 16 புள்ளி 3 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து  158 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. தற்போது சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் உள்ள நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் தலா இரண்டு புள்ளிகள் பெற்று முதல் 2 இடங்களில் உள்ளன.


இதேபோல் குரூப் 2 பிரிவில் வங்கதேசம், இந்திய அணிகள் தலா 2 புள்ளிகள் பெற்று முதல் இரண்டு இடங்களில் உள்ளன. சூப்பர் 12 சுற்றில் இன்று அயர்லாந்து, இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இதேபோன்று இரண்டாவது பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே பலப்பரீட்சை நடைபெறவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.