2022ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் சூர்யகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதன்மூலம், ஐசிசியின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதை பெறும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு சூர்யகுமார் யாதவ் கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டாவது ஆண்டாகும். இந்த ஆண்டில் 1000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஒரு ஆண்டில் 1000 ரண்களுக்கு மேல் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். கடந்த ஆண்டில் இரண்டு சதம் மற்றும் 9 அரைசதம் என அவரின் அதிரடி பட்டியல் உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2022-ம் ஆண்டில் 31 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் 1164 ரன்கள் அடித்துள்ளார். இவரது சராசரி 46.56 ஆக உள்ளது. அதுமட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் மட்டும் 68 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
சிக்கந்தர் ரஸா, சாம் கர்ரன் மற்றும் சூர்யகுமார் ஆகியோருக்கிடையேதான் இந்த விருதுக்கான போட்டி இருந்தது. சிக்கந்தர் ரஸா 735 ரன்கள் மற்றும் 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றொருவரான சாம் கர்ரன் 19 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவர்களை பின்னுக்கு தள்ளி ஐசிசி விருதை சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார்.