முக்கியச் செய்திகள் சினிமா

சாய் பல்லவியின் கார்கி படத்தை வெளியிடும் சூர்யா – ஜோதிகா

கார்கி படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிப்பு, நடனம், என ரசிகர்களைக் கவர்ந்த சாய் பல்லவி, வரிசையாக முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சாய்பல்லவி நடிப்பில் ’கார்கி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் தலைப்பு போஸ்டரை வெளியிட்டனர். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களைக் கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவிவருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: ‘’தடுப்பணைகளை அரசு சும்மா கட்டுவதில்லை…’ – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை’

இந்நிலையில், சாய்பல்லவி கார்கி படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்திருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த காத்திருப்புக்குப் பதிலளிக்கும் விதமாக பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடசன்ஸ் உடன் இணைந்து கார்கி படத்தை சூர்யா, ஜோதிகா – 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இது குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாழ்க்கையின் அதிசய நிகழ்வுகள் பல நேரங்களில் நாம் எதிர்பாராத போதே நடந்து விடுகின்றது.

அப்படி எங்களுக்கு நடந்த அதிசயம் தான் சூர்யா, ஜோதிகா எங்கள் படத்தில் இணைந்து இருப்பது எனவும், சூர்யாவும், ஜோதிகாவும் கார்கியை பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்வதை விட எங்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏதும் இல்லை. இவை அனைத்திற்கும் உறுதுணையாக நின்று செயல்படுத்திய எனது வினியோகஸ்தர் சக்திவேலனுக்கும், ராஜசேகர பாண்டியனுக்கும் மனமார்ந்த நன்றி’ என்று மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

1 மணி நேரம்; 214 உணவு வகை சமைத்து உலக சாதனை

Saravana Kumar

“திமுகவின் தேர்தல் பரப்புரை அவதூறு செய்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது” : முதல்வர் பழனிசாமி

Halley Karthik

சினிமா பாணியில் கார் ஓட்டுநரை கடத்திய கும்பல்

Halley Karthik