மதுரையில் மதநல்லிணக்க கறி விருந்து!

மேலூர் அருகே மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக நடைபெற்ற கந்தூரி விழாவில் அசைவ உணவு விருந்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அதில் அவர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.  மதுரை மாவட்டம் மேலூர் அருகே மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக…

மேலூர் அருகே மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக நடைபெற்ற கந்தூரி விழாவில் அசைவ உணவு விருந்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அதில் அவர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக மேலூர் –
அழகர்கோயில் சாலையில் 1வது வார்டு பழைய சுக்காம்பட்டியில் அமைந்துள்ள
மரியம்பீவி தர்காவில் இன்று சந்தனக்கூடு விழாவையொட்டி கந்தூரி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று தர்காவில் முன்னதாக சர்க்கரை மாற்றி தூஆ செய்யப்பட்டது. இதையடுத்து சுமார் 10 ஆடுகளால் சமைக்கப்பட்ட அசைவ உணவு பரிமாறப்பட்டது. மழைபெய்து விவசாயம் செழிக்கவும், ஒற்றுமை தழைதோங்கவும் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டு உணவருந்தி விழாவை சிறப்பித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.