பாலாவுடன் மீண்டும் இணைவதை உறுதி செய்தார் நடிகர் சூர்யா

பாலா இயக்கத்தில்  தான் மீண்டும் நடிக்க இருப்பதை நடிகர் சூர்யா உறுதி செய்துள் ளார். நடிகர் சிவகுமார், தனது 80-வது பிறந்த தினத்தை நேற்று (அக்டோபர் 27) கொண்டாடினார். முக்கிய திரையுலக பிரபலங்கள் நேரில்…

பாலா இயக்கத்தில்  தான் மீண்டும் நடிக்க இருப்பதை நடிகர் சூர்யா உறுதி செய்துள் ளார்.

நடிகர் சிவகுமார், தனது 80-வது பிறந்த தினத்தை நேற்று (அக்டோபர் 27) கொண்டாடினார். முக்கிய திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அவரை வாழ்த்தினர். இயக்குநர் பாலாவும் நடிகர் சிவகுமாரை நேரில் வாழ்த்தினார். இதற்கான ஏற்பாடுகளை நடிகர் சூர்யாவும் நடிகர் கார்த்தியும் செய்திருந்தனர். இந்தச் சந்திப்பின் போது இயக்குநர் பாலாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் சூர்யா, அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி அவர், ’என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர். 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன், நான். அப்பா ஆசீர்வதிக்க, மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன். அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்’என பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/suriya_offl/status/1453608475829817345?s=24

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அதை இப்போது அவர் உறுதி செய்துள்ளார். பாலா இயக்கத்தில் ‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களில் நடிகர் சூர்யா நடித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.