சூர்யா 44 எப்போது ரிலீஸ் – லேட்டஸ்ட் அப்டேட்…

நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் எப்போது வெளியாகும் என்பது பற்றிய அப்டேட்டை இயக்குநர் கார்த்திக் சுப்பாரஜ் சொல்லியிருக்கிறார். நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 44′ திரைப்படத்தின் படப்பிடிப்பு…

நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் எப்போது வெளியாகும் என்பது பற்றிய அப்டேட்டை இயக்குநர் கார்த்திக் சுப்பாரஜ் சொல்லியிருக்கிறார்.

நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 44′ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதனை அடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.

இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் படங்கள் இயக்குவது மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் பல படங்கள் தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் ‘ஸ்நேக்ஸ் & லேடர்ஸ்’ என்ற வெப்சீரிஸ் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இதற்காக ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்து வருகிறார். அதில் ‘சூர்யா 44’ படம் பற்றிய அப்டேட்டும் சொல்லியிருக்கிறார். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அடுத்த வருடம் கோடை விடுமுறையை ஒட்டி ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ். இதுவரை தான் படங்களில் காட்டியிருக்கும் காதலை விட இந்தப் படத்தில் வித்தியாசமான காதல் படமாக ‘சூர்யா 44’ இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.