இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, தற்போது நெதர்லாந்தில் புதிய உணவகத்தைத் திறந்துள்ளார்.
சிஎஸ்கே அணியின் சின்ன தல என ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் விலகிவிட்டார்.
சிஎஸ்கே அணி கோப்பையை வென்ற 4 சீசன்களிலும் சுரேஷ் ரைனாவின் பங்களிப்பு மிகப்பெரியது. இதுவரை மொத்தம் 205 ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொண்ட ர்ரெனா 5528 ரன்களை குவித்து ஐபிஎல் தொடரின் அனுபவம் மிக்க வீரராக கருதப்படுகிறார்.
பின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட ரெய்னா, ஐபிஎல் தொடர்களிலும் அவர் சரியாக விளையாடவில்லை. அவரின் ஆவேசமான ஆட்டத்தை பார்க்க விரும்பிய ரசிகர்களுக்கு ஒவ்வொரு போட்டியிலும் அவரின் ஆட்டம் ஏமாற்றத்தையே தந்தது. இதனால் ஐபிஎல் தொடரில் அவரை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இதற்கு அவரின் உடல் எடை கூடியதும் காரணமாக கூறப்பட்டது.
I am absolutely ecstatic to introduce Raina Indian Restaurant in Amsterdam, where my passion for food and cooking takes center stage! 🍽️ Over the years, you've seen my love for food and witnessed my culinary adventures, and now, I am on a mission to bring the most authentic and… pic.twitter.com/u5lGdZfcT4
— Suresh Raina🇮🇳 (@ImRaina) June 23, 2023
இந்நிலையில், ரெய்னா இந்திய உணவகம்’ என்ற பெயரில் இந்திய உணவகம் ஒன்றை நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நிறுவியுள்ளார். அது குறித்த தகவலை அவர் சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். சமையல் மீது அதீத ஆர்வம் கொண்ட ரெய்னா, தற்போது ஆம்ஸ்டர்டாமில் புதிய உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார். இவரின் இந்த புதிய தொடக்கத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.







