முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் விளையாட்டு

IPL வர்ணனையாளராகும் சுரேஷ் ரெய்னா?

IPL வர்ணனையாளராகும் சுரேஷ் ரெய்னா?

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் “சின்ன தல” என்று செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் வர்ணனையாளராக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னாவை கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த இரண்டு நாள் ஐபிஎல் மெகா ஏலத்தின்போது சென்னை உட்பட எந்த அணியும் எடுக்காமல் போனது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் ஒன்றாகவே இருந்தது. குறிப்பாக சென்னை அணி ரசிகர்களுக்கு இதுபெரும் வருத்ததை தந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் சில ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் கொட்டித் தீர்த்தனர். இதனையடுத்து சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எடுக்காததற்கான விளக்கத்தை சென்னை அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சுரேஷ் ரெய்னா நடப்பாண்டுக்கான IPL-ன் வர்ணனையாளராகக் களமிறங்கப்போவாதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தியின்படி, தனது ரசிகர்களை உற்சாகப் படுத்துவதற்காக ரெய்னா கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சென்னை அணிக்காக விளையாடியபோது அணியின் துணை கேப்டனாகவும், தோனி இல்லாத நேரத்தில் அணியை வழிநடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 2021ம் ஆண்டோடு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து ஓய்வு பெற்ற ரவி ஷாஸ்திரி தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார். அவருடன் சுரேஷ் ரெய்னா இணைந்து களமிறங்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரதமர் விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு இருக்கக்கூடாது – கே.எஸ்.அழகிரி

EZHILARASAN D

நாளை தொடங்குகிறது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – நியூஸ் 7 தமிழில் நேரலையில் கண்டுகளிக்கலாம்!

G SaravanaKumar

அயோத்தியில் புதிய மசூதிக்கான மாதிரி புகைப்படம் வெளியீடு!

Jayapriya