அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்த விசாரணை அறிக்கையை சமர்பிக்க அவகாசம் வேண்டும் என விசாரணைக் குழு வலியுறுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க கால அவகாசம் கோரி ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்பு அறிக்கை சமர்பிக்க 10 நாட்கள் அவகாசம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்







