ராமர் பாலத்தை தேதிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய வழக்கை பிப்ரவரி 2வது வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் அருகே பாம்பனிலிருந்து இலங்கை தலைமன்னார் தீவுகளுக்கு இடையே சுண்ணாம்பு கற்களான 48 கிலோ.மீட்டர் நீளம் கொண்ட பாலம் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது. இந்த பாலத்தை ராமர் பாலம் என பல இந்து அமைப்புகள் அழைத்து வருகிறார்கள். இதனால் இந்த ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 2015ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சுப்பிரமணியம் சாமி, இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 12ம் தேதியே பதில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்வதாக கூறியிருந்தது. ஆனால் இதுவரை அதனை தாக்கல் செய்யவில்லை என கூறினார்.
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதால் வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரினார்.
அந்த கோரிக்கையை ஏற்று வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 2வது வாரத்திற்கு இந்த வழக்க ஒத்திவைக்கப்பட்டது. மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் மன்னார் இடையே சுண்ணாம்பு கற்களால் ஆன மேடுகள் அமைந்துள்ளன. குறைந்த ஆழத்தில் இருக்கும் இந்த சுண்ணாம்பு மேடுகள் ஒரு பாலம் போல தோற்றம் தருகின்றன. ஆகையால் இதனை புராண இதிகாசமான ராமாயணத்துடன் இணைத்து, கடவுள் ராமரால் சீதையை மீட்க கட்டப்பட்ட ஒரு பாலம் என இந்து மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







