அடுத்த தேர்தலில் யாருக்கு வாக்கு – எலான் மஸ்க் அறிவிப்பு

கடந்த காலத்தில் மக்களாட்சி கட்சிக்கு வாக்களித்ததாகவும், ஆனால் இந்த முறை குடியரசு கட்சிக்கு வாக்களிக்க போவதாகவும் எலான் மஸ்க் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.   உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா கார்…

கடந்த காலத்தில் மக்களாட்சி கட்சிக்கு வாக்களித்ததாகவும், ஆனால் இந்த முறை குடியரசு கட்சிக்கு வாக்களிக்க போவதாகவும் எலான் மஸ்க் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா கார் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அமெரிக்க தேர்தலில் இந்த முறை குடியரசு கட்சிக்கு வாக்களிக்க போவதாக அந்த பதிவில் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஜே பைடன் மீதான வெறுப்பு அரசியலே இதற்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

தொழிற்சங்கங்களை அனுமதிக்கும் நிறுவனங்களால், அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யப்படும் மின்சார கார்களுக்கு அதிபர் ஜோ பைடன் அரசு அண்மையில் வரி சலுகை அறிவித்திருந்தது. இதற்கு எலான் மஸ்க் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜே பைடனின் மக்களாட்சி கட்சி பிரித்தாளும் சூழ்ச்சி மற்றும் வெறுப்பு அரசியலை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தான் கடந்த முறை மக்களாட்சி கட்சிக்கு வாக்களித்ததாகவும் அவர்கள் கருணையோடு செயல்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்த எலான் மஸ்க், ஆனால் தற்போது அவர்கள் வெறுப்பு கட்சியாக மாறிவிட்டனர் என தெரிவித்துள்ளார். எனவே, இனி அவர்களை தான் ஆதரிக்க மாட்டேன் என்றும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

 

அவர்களின் மோசமான தந்திரங்கள் தற்போது தான் வெளிப்படுவதாக தெரிவித்த எலான் மஸ்க், அடுத்த முறை தேர்தலில், டிரம்பை அதிபர் வேட்பாளராக முன்னிறுத்திய குடியரசு கட்சிக்கு வாக்களிக்க போவதாக தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.