கேதார்நாத் கோவில் பக்தர் ஒருவர் தனது செல்லப்பிராணியுடன் வந்து அதற்கு திலகிமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்தியாவின் 12 ஜோதிலிங்க சிவத் தலங்களில் ஒன்றாக விளங்குவது கேதார்நாத் கோவில். இது உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது.
இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரை மட்டுமே திறந்திருக்கும். புண்ணியத் தலமாக விளங்கும் கேதார்நாத் கோவிலுக்கு வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் லட்சகணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
இந்நிலையில், கேதார்நாத் கோவிலுக்கு பக்தர் ஒருவர் தன்னுடன் வளர்ப்புப் பிராணியான நாயை அழைத்துச் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லி அருகே உள்ள நொய்டா பகுதியை சேர்ந்தவர் ரோஹன் தியாகி. இவர் நவாப் என்ற நாயை வளர்த்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் செல்லப்பிராணியுடன் கேதார்நாத் கோவிலுக்கு சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.








