கள் மீதான தடையை நீக்க வலியுறுத்தி நடைபெறும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பனங்கள், பல நேரங்களில் மக்களுக்கான மருந்தாகவும், கேளிக்கை பானகமாகவும், பருவக் காலங்களில் தினசரி பயன்பாட்டிலும் இருந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு கள் இயக்கம் முன்னெடுக்கின்ற கள் இறக்கி விற்கும் போராட்டத்தினை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள சீமான்,
https://twitter.com/SeemanOfficial/status/1484071087684358146
தமிழர்களின் பாரம்பரிய உணவான கள் மீதுள்ள தடையை உடனடியாக நீக்கியும், பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள பனையேறிகளை உடனடியாக விடுவிக்கவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், டாஸ்மாக் மதுவிற்கு மாற்றாக, கள் சந்தையினை மீட்டுருவாக்கம் செய்து, அதன் மூலம் பனைசார் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், கள் இறக்குவதற்கான தடையை நீக்கிட காலங்கடத்தாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சீமான் வலியுறுத்தியுள்ளார்.








