மத்திய ஆயுதக் காவல் படையில் சூப்பர் வேலை…..இளங்கலை பட்டம் இருந்தால் போதும்……. உடனே விண்ணப்பிங்க……….!

மத்திய ஆயுதக் காவல் படையில் உள்ள 349 உதவித் தளபதி (Assistant Commandants)பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPF) என்பது இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 7 முக்கிய ஆயுதப் படைகளின் தொகுப்பாகும். இவை முக்கியமாக எல்லைப் பாதுகாப்பு படை (BSF), சிஆர்பிஎஃப் (CRPF), சிஐஎஸ்எஃப் (CISF), ஐடிபிபி (ITBP), எஸ்எஸ்பி (SSB), அஸ்ஸாம் ரைபிள்ஸ் (AR) மற்றும் தேசிய பாதுகாப்புப் படை (NSG) ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த நிலையில் தற்போது மத்திய ஆயுதக் காவல் படையில் உள்ள 349 உதவித் தளபதி (Assistant Commandants)பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள் எத்தனை………..? 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி எல்லை பாதுகாப்பு படை (BSF) – 108, மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF) – 106, இந்தோ திபெத்திய எல்லைக் காவல் (ITBP) – 12, சாஸ்திர சீமா பால் (SSB) – 53, மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) – 70 ஆகிய காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஏற்கனவே இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், மார்ச் 12-ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்….?

விண்ணப்பதார்கள் நிச்சயம் 20 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். அதேபோல் 2026 ஆகஸ்ட் 1-ம் தேதியின்படி, 25 வயதைக் கடந்திருக்கக்கூடாது. வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி வகுப்பினர்களுக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினர்களுக்கு 3 வருடஙக்ள், மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 வருடங்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு தளர்வு உள்ளது. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 2026-ம் ஆண்டு தகுதிப் பெறுபவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை எப்படி….?

இந்த பணிக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். 2 தாள்கள் கொண்ட எழுத்து தேர்வில், முதல் தாள் எழுத்துத் தேர்வானது 250 மதிப்பெண்களுக்கு பொது திறன் மற்றும் நுண்ணறிவு கொண்டு கொள்குறி வகையில் நடத்தப்படும். இரண்டாம் தாள் 200 மதிப்பெண்களுக்கு பொது அறிவு விரிவாக எழுதும் வகையில் நடத்தப்படும். இதற்கான தேர்வு ஜூலை 19-ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் உடற்தகுதித் தேர்வு நடத்தப்படும். இதிலும் தேர்வாகும் நபர்களுக்கு நேர்காணல் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். அதனைத்தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு இறுதி பட்டியல் வெளியாகும்.

ஆர்வமுள்ளவர்கள் https://upsconline.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பதார்களுக்கு கட்டண தளர்வு வழங்கப்படுகிறது. சென்னை மற்றும் மதுரையில் தேர்வு மையம் அமைக்கப்படும்.

முக்கிய தேதிகள்

அறிவிப்பு வெளியீடு : பிப்ரவரி 20, 2026

விண்ணப்ப தொடக்க தேதி :  பிப்ரவரி 20, 2026

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : மார்ச் 12, 2026

தேர்வு தேதி :  ஜூலை 19, 2026

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.