தீபாவளி பண்டிகை நாளை (அக்.31) கொண்டாடப்பட உள்ள நிலையில், ‘கூலி’ படக்குழுவினர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இத்திரைப்படத்தை அடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது திரைப்படமாக ‘கூலி’ உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சௌபின் சாகிர், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, நடிகை ஸ்ருதிஹாசன், சத்யராஜ், கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகை நாளை (அக்.31) கொண்டாடப்பட உள்ள நிலையில், ‘கூலி’ படக்குழுவினர் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதில் படக்குழுவினர் அனைவரும் கருப்பு நிற உடையணிந்தவாறு உள்ளனர்.







