பாலிவுட் நடிகை சன்னி லியோனின் அடையாள அட்டையை பயன்படுத்தி மர்மநபர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
சமீப காலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு தொழிலதிபர்கள், திரைபிரபலங்கள், நடுத்தர குடும்பத்தினர் பாரபட்சமின்றி பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சன்னி லியோன் ஆன்லைன் மோசடிக்கு ஆளாகியுள்ளார். அவரின் பான் கார்ட் எண்ணை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் ஆன்லைனில் பிரபல நிறுவனத்திடம் ரூ. 2000 கடன் பெற்றுள்ளார்.
இத்தகவலை ட்விட்டர் மூலம் பகிர்ந்துள்ள சன்னி லியோன், சில முட்டாள்கள் என் பான் கார்டு எண்ணை பயன்படுத்தி ரூ. 2000 கடன் பெற்றுள்ளனர். இதனால் எனது சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அதோடு, சம்பந்தப்பட்ட நிறுவனம் தரப்பில், எந்த உதவியும் ஏன் செய்யவில்லை, என கேள்வி எழுப்பியிருந்தார்.
https://twitter.com/SunnyLeone/status/1494249363639455744
இதனை ரசிகர்கள் பலரும் இந்த வைரல் செய்த நிலையில், சன்னி லியோன் அந்த பதிவை நீக்கியதோடு, இந்த பிரச்சனை தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த பிரச்சனையை விரைவாக சரி செய்து, இனி நடக்காது என உறுதி அளித்த சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.







