உயிரை மாய்த்து கொள்ளும் துயரம்; இரண்டாம் இடத்தில் தமிழகம்

கடந்த ஆண்டு நிகழ்ந்த விபத்து மரணங்கள் மற்றும் உயிரிழப்புகள் எண்ணிக்கையில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 33…

கடந்த ஆண்டு நிகழ்ந்த விபத்து மரணங்கள் மற்றும் உயிரிழப்புகள் எண்ணிக்கையில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 33 உயிரிழப்புகள் நடந்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 7 புள்ளி 2 சதவீதம் அதிகம் ஆகும்.

இதில் 22 ஆயிரத்து 207 உயிரிழப்புகள் நடந்துள்ள மகாராஷ்டிரா மாநிலம் நாட்டிலேயே முதலிடத்திலும் 18 ஆயிரத்து 925 உயிரிழப்புகளுடன் தமிழ்நாடு இரண்டாமிடத்திலும் உள்ளது. 14 ஆயிரத்து 965 உயிரிழப்புகளுடன் மத்தியப் பிரதேசம் மூன்றாமிடத்திலும் 13 ஆயிரத்து 500 உயிரிழப்புகளுடன் மேற்கு வங்கம் நான்காமிடத்திலும் 13 ஆயிரத்து 56 உயிரிழப்புகளுடன் கர்நாடகா மூன்றாமிடத்திலும் உள்ளன.

மொத்த உயிரிழப்புகளில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், மேற்குவங்கம், கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டும் 50 புள்ளி 4 சதவீத உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளன. பணிச் சுமை, தனிமை உணர்வு, குடும்ப பிரச்சனைகள், மனநல பாதிப்பு, வறுமை, போதைக்கு அடிமையாதல் போன்றவையே உயிரிழப்புகளுக்கான முக்கிய காரணங்கள் என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது

இதேபோல கடந்த ஆண்டு நாடு முழுவதும் நடைபெற்ற 4 லட்சத்து 22 ஆயிரத்து 659 சாலை விபத்துக்களில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 24 ஆயிரத்து 711 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து உயிரிழப்புகளிலும் 16 ஆயிரத்து 685 மரணங்களுடன் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது இது நாடு முழுவதும் நிகழ்ந்த மொத்த விபத்து மரணங்களில் 9.6 சதவீதம் ஆகும்.

தமிழ்நாட்டில் 2020 ஆம் ஆண்டு 46 ஆயிரத்து 443 ஆக இருந்த விபத்துக்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு 57 ஆயிரத்து 90 விபத்துக்களாக அதிகரித்தது என்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.