அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்ட சீர்காழியை சேர்ந்த சிறுமியின் கோரிக்கையை ஏற்று உயர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவனையில் னுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமூக வலைதளத்தின் மூலம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த 13 வயது சிறுமி அபிநயாவிற்கு systemic lupus erythematous sle என்கிற அரிய வகை தோல் அழிவு நோய் இருப்பதால் அதற்குரிய சிகிச்சை வேண்டி கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பணநோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அந்த சிறுமி மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அந்த சிறுமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்து மருத்துவர்களிடம் சிறப்பான சிகிச்சை வழங்குமாறு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணி ராஜன், துணை
பேராசிரியர்கள் மற்றும் உயர் மருத்துவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.







