திருப்பதி லட்டு தயாரிப்பில் திடீர் மாற்றம் – தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட, கர்நாடகாவின் நந்தினி நெய்யின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதியில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் லட்டுகள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதன் சூப்பரான சுவைக்குக் கடலை…

திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட, கர்நாடகாவின் நந்தினி நெய்யின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதியில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் லட்டுகள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதன் சூப்பரான சுவைக்குக் கடலை மாவு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கற்கண்டு, நெய், பக்குவம் ஆகியவற்றைத் தாண்டிப் பெருமாளின் அருளும் கலந்திருப்பதாகப் பக்தர்கள் நம்புகின்றனர்.

திருப்பதியில், லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது 3 நூற்றாண்டுகளைக் கடந்து தொடர்கிறது. தரம், நறுமணம், சுவை ஆகியன தனித்தன்மை வாய்ந்தவை என குறிப்பிட்டு திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு மற்றும் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட, கர்நாடகாவின் நந்தினி நெய்யின் வினியோகமானது நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 வருடங்களாகவே, நந்தினி நெய்யில் தான் லட்டு தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் லட்டுக்கு, நந்தினி நெய் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. பால் விலை திடீரென உயர்ந்து விட்டதால், பாலின் துணை பொருட்களின் விலையை உயர்த்துவது, தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதனாலே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.