ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவ படையினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகின்றது. இதை தொடர்ந்து 2023-ம் ஆண்டு இந்த மோதல் உள்நாட்டு போராக வெடித்தது. கடந்த 2 ஆண்டுகளாக தொடரும் இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை 60,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 80 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ள நிலையில் 34 லட்சம் பேர் பிற நாடுகளுக்கு சென்றுள்ளனர். இதற்கிடையே தலைநகர் கார்டூம் உள்ளிட்ட பல நகரங்கள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அவற்றில் பல பகுதிகள் மீட்கப்பட்ட நிலையில் அதிபர் மாளிகை தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்தது. இந்தநிலையில் நீண்ட கால போருக்கு பிறகு அதிபர் மாளிகை ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.








