தொடர்ந்து லீக் செய்யப்படும் வாரிசு பட காட்சிகள்; அதிர்ச்சியில் பட குழு

விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் காட்சிகள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் திருட்டு தனமாக லீக் செய்யப்பட்டு வருவது பட குழு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில்…

விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் காட்சிகள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் திருட்டு தனமாக லீக் செய்யப்பட்டு வருவது பட குழு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. தமிழில் வாரிசு எனவும் தெலுங்கில் வாரசுடு எனவும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் சார்பில் தில் ராஜூ தயாரிக்கிறார்.

தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா அடுத்த மாதம் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருவது படகுழு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. வாரிசு திரைப்படம் தொடங்கப்பட்டது முதல் தற்போது இறுதி கட்ட படபிடிப்பு நடந்து வரும் நிலையில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் திருட்டு தனமாக பகிரப்பட்டு வருகிறது.

தற்போது கர்நாடகாவில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் பாம் வெடிக்கும் காட்சிகள் மற்றும் விஜய் ஹெலிகாப்டரில் இருப்பது போன்ற காட்சிகள் திருட்டு தனமாக வெளியாகி உள்ளது. வாரிசு படத்தின் இயக்குநர் வம்சி இதற்கு முன்பே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த நிலையிலும் தொடர்ந்து வாரிசு படத்தின் காட்சிகள் திருட்டு தனமாக வெளியாகி வருவது படகுழு மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.