இந்தியாவின் மராட்டியம் மற்றும் அசாம் மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. மராட்டியத்தின் நாசிக் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 5.33 மணியளவில் ஏற்பட்டுள்ள நிலையில் ரிக்டர் அளவில் 3.3 ஆகா பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 20.401 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 73.714 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அசாமிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அசாமின் மோரிகன் பகுதியில் இன்று காலை 8.17 மணியளவில் ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவானதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்ததால் பெரும் அச்சம் நிலவுகிறது.




