வாரிசு பட பிரச்னை; விஜய்க்காக போராடுவேன்- சீமான்

வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டை தடுக்கும் ஆள் உதயநிதி இல்லை. படம் வெளியாகவில்லை என்றால் போராடுவேன் என சீமான் கூறியுள்ளார். சென்னை திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சி மற்றும் நாம் தமிழர் மருத்துவ பாசறை இணைந்து…

வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டை தடுக்கும் ஆள் உதயநிதி இல்லை. படம் வெளியாகவில்லை என்றால் போராடுவேன் என சீமான் கூறியுள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சி மற்றும் நாம் தமிழர் மருத்துவ பாசறை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாமை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கொசு வலை வழங்கும் திட்டம் என்பதை தவறுதலாக கூறிய மேயரை விமர்சிப்பது தவறு. 50,-60வது ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ளவர்களே தடுமாறும் போது எளிய நிலையில் இருந்து தற்போது வந்துள்ள அவரை விமர்சிப்பது சரியாக இருக்காது. வேலை செய்யும் அவரை விமர்சிக்க கூடாது.


வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டை தடுக்கும் ஆள் உதயதிதி இல்லை. உதயநிதியை அந்த அளவுக்கு குறைத்து மதிப்பிட வேண்டாம். அதுபோல் எல்லாம் நடந்து கொள்ள மாட்டார்” என்று தெரிவித்தார். மேலும் திரைப்படம் தெலுங்கில் வெளியாக விட்டால் களத்தில் இறங்கி போராட்டம் செய்வோம் என அறிவித்தார்.

கட்சிகள் மாறினாலும் மாற்றங்கள் ஏதுமின்றி ஊழல், லஞ்சம், விலையேற்றம் போன்ற அதே அவல நிலைதான் தொடர்கிறது. இனி மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். சாலை குழிகள் சவ குழிகளாக இரூப்பதாக சீமான் குற்றம்சாடினார். நிதிஅமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், கடன் அறிவித்தாரே தவிர எந்தெந்த துறையில் எவ்வளவு கடன் என வெளியிடாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

தமிழ் நாட்டில் மாடுகள் இல்லாத காரணத்தில் தான் தனிப்பெரும் முதலாளிகள் விலை ஏற்றுகின்றனர். அதன் காரணமாகவே தமிழக அரசும் பால் விலையை ஏற்றுயுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.