நடிகர் விஜயின் தளபதி 66 திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜயின் 66ஆவது படத்தை எதிர்நோக்கியுள்ளனர் அவரது ரசிகர்கள். இந்நிலையிூல், விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார் இயக்குநர் வம்சி. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தை தில் ராஜூ இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தில், சரத்குமார், ஷாம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இரண்டு கதாப்பாத்திரத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இதில், ஒரு விஜய்க்கு ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கிறார்.
இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படத்தில் விஜய்க்கு தந்தையாக நடிக்கும் சரத்குமார் அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தளபடி 66 படப்பிடிப்பில் நான் இந்த மாதம் இணைகிறேன். ஆகஸ்ட் மாதத்துக்குள் ஷூட்டிங் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன். தளபதி 66 படத்தின் கதை மிகவும் பவர்ஃபுல்லானது. அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கும்படியாக இந்த ஸ்கிரிப்ட் அமைந்துள்ளது. விஜயுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து, தளபதி 66இல் நடிகர் யோகிபாபு இணைந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பிரபு, நடிகை ஜெயசுதா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இசையமைப்பாளர் தமனும் தளபதி 66 குறித்து புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார். தான் இப்போது ஃபுல் ஃபார்மில் இருப்பதாகவும், தனது கெரியரிலேயே பெஸ்ட்டான ஆல்பத்தை கொடுக்கப்போவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
பிரபல நடிகர்களின் பட்டாளம் இப்படத்தில் இணைந்திருப்பது இப்படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்களின் மத்தியில் மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில், தளபதி 66 படம் 2023 பொங்கல் அன்று ரிலீஸாக உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.