#INDvsBAN டி20 கிரிக்கெட் தொடரில் சுப்மன் கில்லுக்கு ஓய்வு? – பிசிசிஐ தகவல்!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.…

Subman Gill Retired

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19 முதல் தொடங்குகிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்திய அணியின் துணைக் கேப்டனான சுப்மன் கில்லுக்கு வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வளிக்கப்படவுள்ளதாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது:

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டிகள் அக்டோபர் 7, அக்டோபர் 10 மற்றும் அக்டோபர் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கிடையில் 3 நாட்கள் மட்டுமே இருப்பதால், டெஸ்ட் போட்டிகளைக் கருத்தில் கொண்டு சுப்மன் கில்லுக்கு ஓய்வளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.