உலக பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கை டேக் செய்து, ஸ்விகி நிறுவனத்தை வாங்குங்கள் என கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் நேற்று இரவு பதிவு செய்த ட்வீட் வைரலாகி வருகிறது.
எலான் மஸ்க் தயவுசெய்து ஸ்விகி நிறுவனத்தை வாங்குங்கள். அப்போதுதான் அவர்கள் உணவை சரியான நேரத்தில் விநியோகிப்பார்கள் என குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சுப்மன் கில் பதிவிட்டிருந்தார். இதற்கு ஸ்விகி வாடிக்கையாளர் சேவை மையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் உடனடியாக பதிலளித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்தப் பதிவில், ஆர்டர் செய்த உணவு ஆர்டரின் விவரங்களை நேரடி மெசேஜாக அனுப்ப ஸ்விகி கேட்டுக் கொண்டது. மெசேஜ் அனுப்பியவுடன் அதற்கு நன்றி தெரிவித்து ஸ்விகி சுப்மன் கில்லுக்கு ட்வீட் செய்தது.இந்நிலையில், எலான் மஸ்க்கை டேக் செய்து சுப்மன் கில் போட்ட பதிவுக்கு 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும், 1,600 ரீட்வீட்களும் கிடைத்தன. கில்லின் ட்வீட்டுக்கு பல்வேறு தரப்பினர் பதிலளித்துள்ளனர்.
இதில், போலியான ஸ்விகி கணக்கு ஒன்றில் இருந்து, “நீங்கள் டி20 கிரிக்கெட்டில் ஆடுவதைவிட நாங்கள் வேகமாக தான் இருக்கிறோம்” என்ற ட்விட்டர் பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில், முதல் மூன்று போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில், தொடர்ந்து மோசமான ஆட்டத்தையே ஆடி வந்துள்ளார். கடைசி 5 போட்டிகளில் அவர் 49 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.