நேற்று நடைபெற்ற பிளஸ் 2 தமிழ் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத அமைச்சரிடம் பேசி வாய்ப்பு அளிக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் அருகே குன்னம் பேருந்து நிறுத்தம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள போட்டித் தேர்வுக்கான நூலகத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கிருந்த குறிப்பேட்டில் தான் கலைஞர் படிப்பகத்தை திறந்துவைத்தது பெருமை, மகிழ்ச்சி என்றும் அமைச்சர் சிவசங்கரின் பணி தொடர வாழ்த்துக்கள் என்றும் எழுதி கையெழுத்திட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழ்த் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படுமா என கேள்வி எழுப்பியதற்கு பள்ளிகல்வித்துறை அமைச்சரிடம் பேசி மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் என்றும் அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்றும் தமிழக அரசு தொடர்ந்துகல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும் தெரிவித்தார். மேலும் பெரம்பலூர் அரசுமருத்துவக்கல்லூரி அமைக்கபடுமா என கேட்டதற்கு ஒவ்வொன்றாக பண்ணுவோம் என தெரிவித்தார்.