கல்லூரி விடுதி உணவில் பல்லி கிடந்ததால் மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்

கல்லூரி விடுதியில் பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.  திருவேற்காடு அருகே வீரராகவபுரத்தில் உள்ளது எஸ்.ஏ பொறியியல் கல்லூரி. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றன.ர் தற்போது தேர்வு எழுதுவதற்காக…

கல்லூரி விடுதியில் பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. 

திருவேற்காடு அருகே வீரராகவபுரத்தில் உள்ளது எஸ்.ஏ பொறியியல் கல்லூரி. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றன.ர் தற்போது தேர்வு எழுதுவதற்காக விடுதியில் 180 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு நேற்று இரவு உணவாக சாப்பாடு, சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் வழங்கப்பட்டுள்ளது. அதனை மாணவர்கள் சாப்பிட்ட நிலையில், அந்த உணவில் பல்லி கிடந்ததாக மாணவர்கள் கூறியதால், உணவு சாப்பிட்ட மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் சிறிது நேரத்திலேயே ஒரு சில மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டு ஒருவர் பின் ஒருவராக விடுதியிலேயே சரிந்து கீழே விழுந்தனர். இதையறிந்த கல்லூரி நிர்வாகம், பாதிக்கப்பட்ட முப்பது மாணவர்களையும் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து பின்பு மீண்டும் விடுதிக்கு அழைத்து வந்தனர்.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி வட்டாட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விடுதிக்கு சென்று ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் மாணவர்களும் முழு உடல் நலத்துடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விடுதியில் உணவு தயாரித்த சமையல்காரரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்த சம்பவம் அக்கல்லூரி மாணவர்கள் ,மத்தியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.