ஆங்கிலத்தில்தான் உறுதிமொழி ஏற்றோம்: மாணவர் பேரவைத் தலைவர் ஜோதிஸ்

சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை. ஆங்கிலத்தில்தான் உறுதிமொழி ஏற்றோம் என்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் ஜோதிஸ் தெரிவித்துள்ளார். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற முதலமாண்டு மாணவர்களுக்கான நிகழ்ச்சியில்,…

சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை. ஆங்கிலத்தில்தான் உறுதிமொழி ஏற்றோம் என்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் ஜோதிஸ் தெரிவித்துள்ளார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற முதலமாண்டு மாணவர்களுக்கான நிகழ்ச்சியில், சமஸ்கிருத உறுதிமொழி உறுதியேற்பு விவகாரம் தொடர்பாக மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் ஜோதிஸ் குமரவேல் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

நாங்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை, ஆங்கிலத்திலயே உறுதிமொழி ஏற்றோம், உறுதிமொழி ஏற்பின்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழிதான் ஏற்கப்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து தேசிய மருத்துவக் கல்லூரி இயக்குனரக அறிவிப்பின்படி தான் ஹிப்போகிரடிக், மகரிஷி சரக் ஷபத் ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு உறுதிமொழி எடுக்கலாம் என்ற அறிவிப்பின்படி மாணவர் பேரவையினராகவே இணையதளத்தில் எடுத்து உறுதிமொழி எடுத்தோம்.

நேற்றுதான் மாநில அரசு மருத்துவக் கல்லூரி இயக்குனரகம் சரக் ஷபத் உறுதிமொழி எடுக்கக் கூடாது என சுற்றறிக்கை வந்துள்ளது,

அவசரகோலத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழி எடுத்துவிட்டோம். தேசிய மருத்துவக் கல்லூரி இயக்குனரகம் 2021 கல்வியாண்டு மாணவர்களுக்கான அறிவிப்பில் இருந்ததன் அடிப்படையில் நாங்களே மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழி எடுத்தோம்.

தேசிய மருத்துவக் கல்லூரி இயக்குனரகம் இரு உறுதிமொழிகளில் எதை வேண்டுமானாலும் எடுக்கலாம் என கூறியிருந்த நிலையில், மாணவர் பேரவையினர் நாங்களே சரக் ஷபத் உறுதிமொழி எடுத்தோம். சரக் ஷபத் உறுதிமொழி ஏற்பில் எந்த அரசியலும் இல்லை, உறுதிமொழி ஏற்பு தொடர்பாக நாங்கள் கல்லூரி நிர்வாகத்தினர் யாரிடமும் இதுகுறித்து கேட்காமலேயே நாங்களாகவே உறுதிமொழியை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உறுதிமொழி ஏற்றோம் என்றார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மாணவர்களிடம்  ஆட்சியர் அனீஷ் சேகர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.