வெறும் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே கொண்டு பெற்றோர் தங்கள் குழந்தைகளை மதிப்பீடு செய்யக்கூடாது : பிரதமர் மோடி

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு பயத்தைப் போக்கவும், தேர்வுகளை எவ்விதம் எதிர்கொள்வது குறித்தும், காணொலி காட்சி மூலம், பிரதமர் மோடி ஆலோசனை வழங்கினார். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்கும் “பரிக்சா பே சர்ச்சா”…

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு பயத்தைப் போக்கவும், தேர்வுகளை எவ்விதம் எதிர்கொள்வது குறித்தும், காணொலி காட்சி மூலம், பிரதமர் மோடி ஆலோசனை வழங்கினார்.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்கும் “பரிக்சா பே சர்ச்சா” எனும் தலைப்பில், பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி, தொடர்ந்து 4-வது ஆண்டாக நடைபெற்றது. கொரோனா நோய் தொற்று காரணமாக, இந்த ஆண்டு காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்வில், 81 நாடுகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்று பிரதமருடன் உரையாடினர். மாணவர்கள் தேர்வுகளை எண்ணி பயப்படகூடாது எனவும், மாணவர்கள் அன்றாடம் படித்து வந்தால், தேர்வு எனும் மன நெருக்கடியை தவிர்க்க இயலும் என்றும் பிரமதர் குறிப்பிட்டார்.

வெறும் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே கொண்டு, பெற்றோர் தங்கள் குழந்தைகளை மதிப்பீடு செய்யக்கூடாது எனவும், அவர்களிடம் உள்ள தனித்திறமைகளை கண்டறிந்து, ஊக்குவித்திட வேண்டும் எனவும், பிரதமர் ஆலோசனை வழங்கினார். பெற்றோர்கள் மாணவர்களுக்கு வீட்டில் ஒரு ஆசிரியராகவும் விளங்க வேண்டும் எனவும் பிரதமர் அறிவுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.