மாணவர்கள் நல்ல நூல்களை படித்து வாழ்க்கையில் முன்னேர வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில், கல்வித்துறை சார்பில் இன்று காமராஜர் மணிமண்டபத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு சிறந்தப் படைப்பாளிக் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் நாள் விழா போட்டிகளில்
மண்டல அளவில் வென்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் எம்பி செல்வகணபதி, கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி அரசு, கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், இதன் காரணமாக புதுச்சேரியில் ஏழை குடும்பத்தை சார்ந்தவர்கள் மருத்துவர்கள் ஆகி உள்ளனர் என பெருமிதம் தெரிவித்தார். மாணவர்கள் நல்ல நூல்களை படிக்க வேண்டும். படிக்கின்ற பழக்கத்தை உருவாக்கி வாழ்க்கையில் முன்னேர முடியும் என அறிவுறுத்ததினார்.
மேலும் ஆசிரியர் மற்றும் பெற்றோர் சொல்வதை கேட்டு வயதில் பெரியவர்களை மாணவர்கள் மதிக்க வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கான திட்டங்கள் அனைத்தும், மீண்டும் செயல்படுத்தப்படும் என தெரிவித்த அவர், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1 மாதத்திற்குள் இலவச மடிக்கணினியும், மாணவர்களுக்கான இலவச சைக்கிள் 2 மாதத்திற்குள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.








