சான்றிதழ் தர மறுக்கும் தனியார் கல்லூரியை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் செயல்பட்டு வரும் டாக்டர். நாகரத்தினம் கல்வியில் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இக்கல்லூரியில் அரசாணை 92 ன் படி கடந்த கல்வி ஆண்டில் பயின்ற எஸ்.சி/ எஸ்.டி மாணவர்களின் அசல் சான்றிதழ்களை தர மறுப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சான்றிதழ் தர மறுக்கும் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
— சே. அறிவுச்செல்வன்







